/ கதைகள் / எழுத்து பிறந்த கதை
எழுத்து பிறந்த கதை
சிறுவர் – சிறுமியருக்கு அறிவூட்டும் இரண்டு கதைகளின் தொகுப்பு நுால். முதல் கடிதம், ஆங்கில எழுத்துகள் தோன்றியது எப்படி என்ற தலைப்புகளில் கதைகள் உள்ளன. பழங்குடி சமூகத்தில் எழுத்து நடைமுறை துவங்குவதற்கு அடிப்படையாக அமைந்த ஒரு கற்பனை நிகழ்வு மையக்கருவாக அமைந்துள்ளது. ஒரு தொடர்பியல் நடைமுறையை புரிந்து கொள்ளாத சமூகம் எப்படி செயலாற்றும் என்பதாக படைக்கப்பட்டுள்ளது.அடுத்து, எழுத்து எப்படி பிறக்கிறது என்பதை கற்பனை கலந்து கதையாக படைக்கப்பட்டுள்ளது. இது, முதல் கதையின் தொடர்ச்சி போல் உள்ளது. இரண்டுமே சுவாரசியம் தருகின்றன. எளிய நடையில் உள்ளதால் வாசிக்க உற்சாகம் தருகிறது. சிறுவர்களுக்கு அறிவூட்டும் கதை நுால்.– மதி