/ அறிவியல் / இரும்பைக் கண்டுபிடித்த சாதனைத் தமிழர்கள்

₹ 250

தமிழகத்தில் இரும்புக் காலத்தின் தொன்மையை ஆதாரங்கள் வழியாக நிறுவும் நுால். தமிழகத்தில் ஆதிச்சநல்லுார், சிவகளை, கீழடி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த தொல்லியல் ஆய்வுகள் பற்றிய விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆய்வுகளின் போது கிடைத்த உலோகங்கள் குறித்து அலசப்பட்டுள்ளது. இதன் வழியாக, தமிழர் நாகரிக தொன்மை பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆதிச்சநல்லுார் இரும்பு உலைகள் பற்றியும், கிரீஸ் நாட்டு தொடர்பு பற்றியும் விளக்கப்பட்டு உள்ளது. தமிழர் நாகரிகத்துக்கு சான்றாக கொற்கை அகழாய்வு எடுத்துக் காட்டப்பட்டு உள்ளது. தமிழக தொன்மை வரலாற்றை பறைசாற்றும் நுால். – புலவர் சு.மதியழகன்


முக்கிய வீடியோ