/ கவிதைகள் / காவியம் முழுவதும் நல்லறமே பாடிய கம்பன்!
காவியம் முழுவதும் நல்லறமே பாடிய கம்பன்!
கம்பன் கவிச்சோலையில் நல்லறத்தை தேடி எடுத்து புகட்டும் நுால். அற விளக்கத்தை திருக்குறள் போன்ற நுால்களிலிருந்து வழங்குகிறது. ராமாயண பாத்திரங்கள் ஒவ்வொன்றும் அறத்திலிருந்து விலகாமல் இயங்கியுள்ள அடிப்படையை சுட்டிக்காட்டுகிறது. ராமாயணத்தின் ஆறு காண்டங்களில், படலங்கள் வாயிலாக வெளிப்படும் அறச்சிந்தனைகளை எடுத்து கூறுகிறது. இயற்கை மற்றும் நாடு, நகரத்தை அறச்சிந்தனையுடன் பாடுவதை எடுத்தியம்புகிறது. ஒவ்வொரு பாடலுக்கும் அறத்துடன் தலைப்பு தந்து விரித்துரைக்கிறது. இல்லறம், சொல்லறம், வில்லறத்தை, நல்லறமாக ராமன் ஏற்று எடுத்துக்காட்டாக வாழ்ந்ததை குறிப்பிடுகிறது. அறம் கூறும் நுால். – முகிலை ராசபாண்டியன்