/ கதைகள் / தேடினால் தொலைந்து போவாய்...!
தேடினால் தொலைந்து போவாய்...!
சரித்திர காலத்தையும், சமூக நிகழ்வையும் இணைத்து புனையப்பட்டுள்ள நாவல். பொற்பனைக்கோட்டை கிராமத்தில் கொலை, தற்கொலை, விபத்துகள் என மரண நிகழ்வுகள் போலீசுக்கு புதிராக இருக்கின்றன. இவை தொடர்பாக கட்டுக்கதைகள் நடமாடுகின்றன. அதன்படி சோழர், பாண்டியர் கால வரலாற்று நிகழ்வுகள் மற்றொரு கதையாக கூறப்பட்டுள்ளன. பொற்பனைக்கோட்டை, சோழ படைவீரர்களால் சூறையாடப்பட்டு, மக்கள் இடம் பெயர்ந்ததாக புனையப்பட்டுள்ளது. அங்கிருந்த புதையலை கைப்பற்ற பாண்டியர் முயன்றதையும் குறிப்பிடுகிறது. அது, தற்போதைய நிகழ்வுகளுடன் முடிச்சு போடப்படுகிறது. கொலைகளை நிகழ்த்துவோரை போலீஸ் கைது செய்வதுடன், பழங்கால புதையலை மீட்டெடுப்பது போலவும் அமைந்த நாவல் நுால். – புலவர் சு.மதியழகன்




