/ கட்டுரைகள் / தேடியுனைச் சரணடைந்தேன்

₹ 200

சைவ சித்தாந்தம், இலக்கியம், சித்த மருத்துவம் உள்ளிட்ட பொருண்மைகளை விளக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். சிதம்பரம் நடராஜர் கோவில் பெருமைகளை முன்வைத்து மனம், அண்டப்பெருவெளி, சிதம்பர ரகசியம் இடையே உள்ள தொடர்புகளை சைவ சித்தாந்த நோக்கில் விளக்குகிறது. ஆன்ம வழிபாடு, ஆகம வழிபாடுகளை விவரிக்கிறது. முருகக்கடவுள் பெருமையை கூறும் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. திருவாவினன்குடி தலச்சிறப்பை விவரிக்கிறது. பழனி கட்டுரையில் சித்தர், சித்து, கண்டம் குறித்த செய்திகளை எடுத்துக்கூறுகிறது. இணைய வழிக் கல்வி, உ.வே.சாமிநாதையர் தமிழ்ப்பணிகள் என பலவற்றை குறித்த செய்திகளையும் அள்ளித் தரும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு