/ தமிழ்மொழி / தேம்பாவணியும் தமிழ்ச் சந்தங்களும்

₹ 200

வீரமாமுனிவரின் வாழ்வியல், தமிழ்ச்சந்தங்களின் வளர்ச்சி, தேம்பாவணியில் சந்த வகைபாடுகள், சந்தங்களின் பொருட்சிறப்பு, தனிச்சிறப்பு என்னும் பகுப்புகளைக் கொண்ட ஆய்வு நுால். வீரமாமுனிவர் எழுதிய வாழ்வியல் காப்பியமே தேம்பாவணி. 18ம் நுாற்றாண்டில் இத்தாலி நாட்டிலிருந்து வந்து, மதுரையில் கிறிஸ்துவத் தொண்டராகச் செயல்பட்டார்.தமிழில் பொருள் புரிந்து கொள்ளும் வகையில் அவர் உருவாக்கிய சதுரகராதி பெயர், பொருள், தொகை, தொடை ஆகிய நான்கு பகுதிகளுடன் 15 ஆயிரம் தமிழ்ச் சொற்களுக்கும் பொருள் கூறுகிறது. வீரமாமுனிவரின் இசைப் புலமையையும், தேம்பாவணியின் சந்தங்களையும் முழுமையாக அறிந்துகொள்ள உதவும் நுால். – முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை