/ கதைகள் / பின் மதியம் ஒரு நாள்
பின் மதியம் ஒரு நாள்
சீரிய கருத்துகளை தனித்துவமாக சொல்லும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். வானத்தின் ஒரு துளி, ஒரு ராகம் மற்றும் தீ போன்ற வித்தியாசமான தலைப்புகளில், 10 கதைகள் உள்ளன. எளிய மனிதர்களின் நிறைவேறாத ஆசைகளை முன்வைத்து விவாதிக்கின்றன. காடுகளின் உணவுச் சங்கிலி இயல்பையும், சகோதரப் பாசத்தின் உன்னதத்தையும் காட்டுகின்றன. கதைகளில் உலவும் மனிதர்களும், நிலமும் மனதில் பதிகின்றன. படைப்புகளில் ஒலிப்பது, வாழ்க்கை பயணங்களில் யாவரும் கடந்து போகும் குரல்கள் தான். அவற்றை தனித்துவமாக எடுத்துக்காட்டி வசீகரிக்கின்றன. வசனங் களில் ஊடாடும் உவமைகள் ரசிக்கத்தக்கதாக இருக்கின்றன. கண்களுக்கு முன் தட்டுப்படும் அத்தனையிலும் படைப்பின் தரிசனத்தை வெளிச்சமிட்டு காட்டும் நுால். – ஊஞ்சல் பிரபு