/ கதைகள் / தென்னகத்து மாவீரன் இவன்
தென்னகத்து மாவீரன் இவன்
கற்பனையாக அமைக்கப்பட்ட நாடக நுால். முக்கிய கதாபாத்திரங்களாக அரசன், அரசி, இளவரசன், மந்திரி, மெய்க்காவலர், பொதுமக்கள் தான் நாடகத்தை நடத்திச் செல்கின்றனர்.தந்திரம், சூழ்ச்சி, வாட் போர், முகமூடி, சிறைவாசம், விஷம் கொடுத்து கொல்ல நினைத்தல், ஆடல் அழகி, மது, மாது போன்ற நிகழ்ச்சிகள் கதையை விறுவிறுப்பாக நடத்திச் செல்கின்றன. அடுத்த காட்சியைப் படிக்க வேண்டும் என்ற உந்துதல் தருகிறது. தென்மாவட்டங்களின் பெருமை பேசப்படுகிறது. குழந்தையை இழந்த அமைச்சர் பேசும் வீர வசனம் காவலர்களை அச்சுறுத்துகிறது. நகைச்சுவைக்காக சைவ, வைண பாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. நாடகம் எழுதுவோருக்கு வழிகாட்டி நுால்.– புலவர் ரா.நாராயணன்