/ கதைகள் / தென்னைமரம் பேசுகிறேன்...!

₹ 120

தாவர வளர்ச்சிக்கு தண்ணீர் மிக அவசியம் என்ற பார்வையுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். வீட்டில் வளர்க்கும் தென்னைக்கு நீர் ஊற்றும் அவசியத்தை சொல்கிறது. எங்கு நோக்கினும் மனித கூட்டம். ஜனத்தொகை பெருகிவிட்டதால் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னுக்கு வந்துவிடுமா என்ற கேள்வி சார்ந்துள்ளது. சாலையை சீர்படுத்த பல துறைகள் இணைய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. அறியாமை மூலதனமாகும் அவலத்தை எடுத்துரைக் கிறது. சோமாறி என்றால் சோம்பேறி என அருமையான விளக்கம் தரப்பட்டுள்ளது. துாய்மை பணியாளர் தொண்டு போற்றுதலுக்கு உரியது. அவர்கள் பிரச்னையில் அரசியல்வாதி துண்டு விரிக்கும் அவலத்தையும் உரைக்கிறது. சமூக நீதி கதைகளின் தொகுப்பு நுால். – சீத்தலைச் சாத்தன்


சமீபத்திய செய்தி