/ இலக்கியம் / தென்தமிழக நாட்டுப்புற வழக்காறுகளில் இடம் பெயர்வு

அருள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை-600 078. போன்: 044-6538 3000. மனித குல வரலாறே இடம் பெயர்தலில் தான் துவங்குகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, இடம் பெயர்தல் என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு கொண்டது. இடம் பெயர்தல் குறித்து தமிழ் இலக்கியங்களில் பல்வேறு குறிப்புகள் உள்ளதை ஆசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார்.சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் இயற்கைக் காரணங்களால் மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு பெயர்ந்தது குறித்து விரிவாகவே விளக்குகிறார். இவரது ஆய்வுக்கு, இவர் மேற்கொண்ட களப்பணி துணை நிற்கிறது.திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை மட்டும் தன் களப் பணிக்காக ஆசிரியர் தேர்ந்தெடுத்து அதுபற்றிய விவரங்களை விவரமாக கொடுத்திருக்கிறார். தென்மாவட்டங்கள் பற்றி ஆய்வு செய்பவர்களுக்கு இப்புத்தகம் பெரிதும் உதவும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை