தெரிந்து கொள்ள வேண்டிய திருமுதுகுன்றம்
விருத்தாசலம் என்னும் திருமுதுகுன்ற பழமலைநாதர் திருத்தல வரலாற்றையும், சிறப்பையும் விவரிக்கும் நுால். இங்குள்ள கல்வெட்டுகளில் பராந்தகசோழன், கண்டராதித்த சோழன், செம்பியன் மாதேவி, ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், ராஜாதிராஜ சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆகிய ஏழிசை மோகன காடவராயர் பெயர்கள் பொறிக்கப்பட்டு உள்ளது குறித்து தெரிவிக்கிறது.கோவில் மற்றும் கோபுரங்களைக் கட்டமைத்த வரலாறும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராவணனை, திருமுதுகுன்றத்தை சுற்றி செல்லப் பணித்த நந்தியின் செயல் போன்ற புராணக் கதைகளும், இத்திருத்தலத்தில் நடைபெற்ற அற்புதங்களும் இடம் பெற்றுள்ளன. விருத்தாசலத்தின் இயற்கை வளம், சுற்றுச்சூழல், நிர்வாகம், அரசியல் நிகழ்வுகள், பள்ளிகள், மருத்துவமனை, நீதிமன்றம் போன்ற வசதிகள் கிடைத்த வரலாறு, அருளாளர்கள், அரசியல் தலைவர்களின் அறக்கொடைகள் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ள நுால். – புலவர் சு.மதியழகன்