/ புத்தக மதிப்புரை / தி கிப்ட் ஆப் எ நோபில் லைப் (ஆங்கிலம்)
தி கிப்ட் ஆப் எ நோபில் லைப் (ஆங்கிலம்)
தமிழுக்கு முன்னுரிமை, கல்வி வளர்ச்சிக்கு உதவுதல் என அபூர்வ பண்புகளுக்கு சொந்தக்காரரான அரிமா கிருத்தி வாசன் வாழ்க்கை வரலாற்று புத்தகம். உழைப்பால் கிடைத்ததை அடுத்தவருக்கு கொடுத்து உதவும் குணத்தால் உயர்ந்த விபரம் படிப்படியாக கூறப்பட்டுள்ளது. குண நலன்களை உள்ளத்தில் பதியமிடுகிறது. எல்லாரும் வாழ்கின்றனர்; ஆனால், சரித்திரமாவது சிலரால் மட்டும் தான் என்ற பாடத்தை புகட்டுகிறது. வேலை என்பது சுமை அல்ல; கடவுள் கொடுத்த வரம் என எண்ணினால் வெற்றி நிச்சயம் என்கிறது. கட்டட தொழிலில் ஈடுபாட்டுடன் கற்றுக்கொண்டது, உச்சம் தொட உதவியதை குறிப்பிடுகிறது. படிக்க வேண்டிய வாழ்க்கை வரலாறு நுால். – சீத்தலைச்சாத்தன்




