/ ஆன்மிகம் / தில்லையில் தொடரும் தொல்லைகள்
தில்லையில் தொடரும் தொல்லைகள்
சிதம்பரம் நடராஜர் திருக்கோவில் வரலாற்று செய்திகளையும், நடை முறைகளையும் தெரிவிக்கும் நுால். சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்தும், தீட்சிதர்களின் வாழ்க்கை முறை, தலப்பணி, விதிமுறை பற்றிய செய்திகளையும் தொகுத்து தருகிறது. முரணான செயல்பாடுகளையும், கருத்தோட்டங்களையும் விரிவாக வழங்குகிறது. தீட்சிதர்கள் வரையறுத்த நிர்வாக விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. முகலாயர் படையெடுப்புகள், கர்நாடகப் போர், திருச்சித்திரக்கூடம் பற்றிய குறிப்புகளை அறிய தருகிறது. அரசு கட்டுப்படுத்திருந்த பின்னணியையும் முன்வைக்கிறது. கோவில் சொத்துக்கள், குத்தகை முறை, நகை, பண வரவு முறைகளை விளக்கும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு




