/ இலக்கியம் / திரைகடல் ஓடு திரவியம் தேடு
திரைகடல் ஓடு திரவியம் தேடு
குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, சென்னை-17. (பக்கம்:184)வேலை கிடைத்து, தொழிலாளியாக இருப்பது சிரமம். வேலை வாங்கும் முதலாளியாக இருப்பது அதைவிட சிரமம். பிறநாட்டு நிறுவனத்துடன் சேர்ந்து, இந்தியாவில் தொழில் அதிபர் ஆவது மிக மிகச் சிரமம். இப்படி "சிரமம் ஆனதைத் தன் திறமையால் "சிகரம் ஆக்கியவர் தொழிலதிபர் என்.சுப்பிரமணியம். இவரது வெற்றியின் பயண அனுபவங்களை, இந்நூலில், அற்புதமாகப் பதிவு செய்துள்ளார். மேலை நாட்டினரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய கால மேலாண்மை, கடின உழைப்பு, பொறுப்புணர்வு, தரமான வாழ்க்கை ஆகியவற்றைப் பெரிதும் இந்நூலில் போற்றியுள்ளார்.சிறந்த தொழில் அதிபருக்கான ஜப்பானிய விருது பெற்ற இந்நூலாசிரியரின், நற்பண்புகளும், கடும் உழைப்பும் இந்நூலைப் படித்து முடித்ததும் நாமும் பெற விழைவோம்.