/ ஆன்மிகம் / திருஅருட்பா ஞான விளக்கம்

₹ 190

23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை - 17, (பக்கம்: 512) திருஅருட்பாவின் ஆறு திருமுறைகளும், பன்னிரண்டு தொகுதிகளாகப் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்த வரலாற்றையும், பிற்காலத்தில் அதில் இடைச்செருகல்களாகச் சேர்க்கப்பட்ட பாடல்களையும் இந்த நூல் தெளிவாகத் தெரிவிக்கிறது. திருவருட்பாவின் இரண்டாம் திருமுறையில் உள்ள பாடல்கள் அனைத்திற்கும், ஞான விளக்க உரையை எழுதி வெளியிட்டுள்ளார் நூலாசிரியர். இன்று வள்ளலார் என்று நம்மால் போற்றப்படும் இராமலிங்க சுவாமிகள், சிவபெருமானை வள்ளலார் என்று போற்றியிருப்பதை இந்த நூல் விளக்கிக் கூறுகிறது.இராமலிங்க வள்ளலார், தண்ணீரால் விளக்கெரித்தது முதலான பல அற்புதச் செயல்களை அங்கங்கே இடமறிந்து தந்துள்ளார் நூலாசிரியர். ஞான விளக்கம் என்னும் தலைப்பைப் பார்த்து விட்டு, நூல் மிகவும் கடினமாக இருக்குமோ என்று அஞ்சத் தேவையில்லை. எளிய நடையில் பொருள் விளக்கத்தை வழங்குகிறது இந்த நூல்.


புதிய வீடியோ