திருஞானசம்பந்தர் தேவாரம் (இரண்டாம் திருமுறை முழுவதும் மூலமும் உரையும்)
திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்களுக்கு, எளிய உரை தரும் நுால். தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து, இலங்கை கேதீச்சரத்தை பாடிப் பணிந்துள்ளார். காளத்தியில் இருந்தவாரே, கேதாரம் முதலான இமயமலைப் பகுதி பதிகளை பாடி,யுள்ளார். மற்றவர் நிலைகண்டு இரக்கப்படும் தன்மை உள்ளவர். திரு ஆமாத்துார் இறைவனைப் பாடி, அங்கு பணி செய்யும் தொண்டர்களுக்கு உணவு தர வேண்டும் என்று வேண்டுகிறார்.இரண்டாம் திருமுறையில், 122 ஊர் விளக்கம் தரப்பட்டுள்ளன. திருமுறையில் 1,331 பாடல்களுக்கும் புரியும் வகையில் உரை அமைந்துள்ளது. பின் இணைப்பாக பதிகளின் தொடர் எண்களும், பதிகத்தின் துவக்கமும் தரப்பட்டுள்ளன. பாடல்கள் அகரநிரல் வரிசைப்படுத்தி எண் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு பதிகத்திற்கும் இறைவன் பெயர், இறைவி பெயர், தல விருட்சம், அமைவிடம், எந்த ராகத்தில் பாடப்பட்டுள்ளது போன்ற விபரங்கள் தரப்பட்டுள்ளன. வாசிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பக்தியோடு படிக்க வேண்டிய நுால்.– புலவர் இரா.நாராயணன்