/ ஆன்மிகம் / திருஞானசம்பந்தர் தேவாரம் (மூன்றாம் திருமுறை முழுவதும் மூலமும் உரையும்)
திருஞானசம்பந்தர் தேவாரம் (மூன்றாம் திருமுறை முழுவதும் மூலமும் உரையும்)
மூன்றாம் திருமுறை பாடல், விளக்கம் அமைந்துள்ள நுால். சீர்காழியில் பிறந்த ஞானசம்பந்தர், மதுரை வழக்கு மொழியைப் பேசுகிறார். திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் திருப்புகலுார், திருவீழிமிழலை, திருமறைக்காடு, திருவாய்மூர் தலங்களில் பாடியுள்ளனர். மூன்றாம் திருமுறை பாடல்களால் அறியப்படும் செய்திகள், வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. பதிக பெயர்களும், எண் தொடக்கமும் தரப்பட்டுள்ளன. தில்லைக் கோவிலில் ஐந்து அம்பலங்களையும் குறிப்பிடுகிறது. நடராஜப் பெருமான் வினைகளை நீக்கக் கூடியவர் என விளக்கம் கூறுகிறது. ஒவ்வொரு தலத்திற்கும் உரிய இறைவன், இறைவி பெயர், ஸ்தல மரம் பற்றிய தகவல்களை தருகிறது. பாடல்கள் எந்த ராகத்தில் பாடப்பட்டது என்ற விபரங்களையும் தருகிறது. பக்தி நலம் சார்ந்த நுால்.– புலவர் இரா.நாராயணன்