/ கேள்வி - பதில் / திருக்குறள் அறத்துப்பாலில் வினாடி–வினா–விடை
திருக்குறள் அறத்துப்பாலில் வினாடி–வினா–விடை
திருக்குறளில் கேள்வி கேட்டு எளிய பதில்களை கொண்டு அமைந்துள்ள நுால். நீதி நுால்களில் விருப்பம் கொண்டவர்களுக்கு உதவும். கடவுள் வாழ்த்தில், எழுத்துக்கள் எதை அடிப்படையாக கொண்டிருக்கின்றன என்ற கேள்வியுடன், உலகம் யாரை அடிப்படையாக கொண்டிருக்கிறது எனவும் கேட்கப்பட்டுள்ளது.அதற்கு பதிலாக, எழுத்துக்கள் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது என விளக்கம் கூறுகிறது. எளிமையான, உடனே புரியும்படியான பதில்கள் இதில் உள்ளன.இதே போல், அறத்துப்பால் 38 அதிகாரங்களையும், குறட்பாக்களையும் சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் கேள்வி – பதில்கள் உள்ளன. – சாத்தன்