/ தமிழ்மொழி / திருக்குறள் (ஆங்கிலம்)
திருக்குறள் (ஆங்கிலம்)
பழந்தமிழ் கருத்து பெட்டகமான திருக்குறள் நுால் ஆங்கில மொழியில் உரையுடன் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. திருக்குறள் அறக்கருத்து உலகமெங்கும் பரவ வேண்டும் என்ற நோக்கில், பாதிரியார் ஜி.யு.போப் மற்றும் இருவரால் 1886ல் ஆங்கில மொழியில் முதன்முதலாக வெளியிடப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் திருக்குறள் கருத்துகள் பரவ இது ஏதுவாக இருந்தது. தமிழில் திருக்குறள் பிரசுரிக்கப்பட்டு அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு தரப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆங்கில விளக்க உரையும் உள்ளது. இது போல் அனைத்து குறள்களுக்கும் உள்ளது. தமிழ் மொழியில் உருவான அறப்புத்தகம், ஆங்கிலத்தில் அழகுற தொகுக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழியிலமைந்த திருக்குறள் நுால். – ராம்




