/ இலக்கியம் / திருக்குறள் நீதி இலக்கியம்
திருக்குறள் நீதி இலக்கியம்
அறநெறி மற்றும் நீதி விளக்கம் பற்றி உலக அளவில் தகவல்களை திரட்டி தரும் நுால். திருக்குறளை பல கோணங்களில் அலசுகிறது. உலகில் பழமையான மொழிகளில் நீதி போதனை நுால்களுடன் திருக்குறளை ஒப்பிட்டு, மேன்மை தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. நீதி நெறியை புகட்டும் உலக இலக்கியங்கள் குறித்த பார்வையை தருகிறது. திருக்குறளின் இலக்கிய இயல்பை ஆராய்ந்து, செறிவுமிக்க கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. நீதிக்கும், அறத்துக்கும் உள்ள உறவு நிலையை அறிய தருகிறது. நீதிநெறியை புகட்டும் இலக்கியங்களின் இயல்பு பற்றிய தகவல்களும் உள்ளன. இலக்கிய உலகில் திருக்குறளுக்கு உள்ள தரம், மதிப்பு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. நீதிநெறி அடிப் படையிலான இலக்கியங்கள் பற்றிய நுால். – ஒளி




