/ தமிழ்மொழி / திருக்குறள் புத்துரை

₹ 150

திருக்குறளுக்கு விளக்கவுரை வழங்கியுள்ள நுால். பிற உரைகளைப் போலவே குறள்களின் கீழே உரைகளைத் தந்திருப்பதோடு, சிலவற்றில் இலக்கணக் குறிப்பும், அதிகாரத் தலைப்புகளுக்கு சிறு விளக்கமும் தந்திருப்பது சிறப்பு. வழமையான விளக்கங்களாக இருப்பினும் எளிய நடையில் அமைந்திருக்கின்றன. குறள்கள் பலவற்றில் மாறுபட்ட கருத்துகள் மற்றும் பொருள்கள் பிற உரைகளிலிருந்து முற்றிலும் மாறுபடுகின்றன. உதாரணமாக, எண்குணத்தான் என்பதற்கு ‘எண்ணத்தக்க குணத்தவன்’ என்றும், வாலறிவன் என்பதற்கு ‘மெய்யறிவு கொண்டவன்’ என்றும், பிறவாழி என்பதை, ‘பிற பொருளின்பம்’ என்றும், இறைவனடி என்பதற்கு, ‘மெய்யறிவினரின் திருவடி’ என்றும், தானம் என்பதற்கு ‘அறம்’ என்றும் விளக்கப்பட்டுள்ளன. பல ஆய்வுக்குரியன; விவாதத்துக்குரியனவாகவும் தோன்றுகின்றன. பிற்சேர்க்கையாகத் தலைப்பு அகர முதலி மற்றும் செய்யுள் முதற்குறிப்பு அகர முதலி இடம்பெற்றுள்ளன. – மெய்ஞானி பிரபாகரபாபு


புதிய வீடியோ