/ தமிழ்மொழி / திருக்குறளும் ஒளவையாரின் நான்கு நீதி நுால்களும்

₹ 125

அவ்வையாரின் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழியை திருக்குறளுடன் ஒப்பிட்டு விளக்கும் நுால். ஆத்திசூடி, ‘அறம் செய விரும்பு’ என்கிறது. திருக்குறள், மனதில் குற்றம் இல்லாமல் இருப்பதே சிறந்த அறம் என்கிறது. மூதுரையில், ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்று சொல்கிறது. அதே கருத்தை வள்ளுவர், ‘எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு’ என்கிறார். செலவைச் சுருக்கி சேமித்து வாழ் என்பார் அவ்வையார். திருவள்ளுவரோ, செல்வம் வரும் அளவு குறைவாயினும் பரவாயில்லை. செலவு அதிகமாகாமல் பார்த்துக்கொள்ள சொல்கிறார். பல கோணங்களில் ஆய்வு செய்து விளக்கம் தரும் நுால்.– புலவர் ரா.நாராயணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை