/ கதைகள் / திருமணம் குழந்தையால் நிச்சயிக்கப்படுகிறது
திருமணம் குழந்தையால் நிச்சயிக்கப்படுகிறது
திகில் திருப்பங்களுடன் விறுவிறுப்புடன் படைக்கப்பட்டுள்ள நாவல் நுால். அதிர்ச்சி, ஆச்சரியம் ஒருங்கே வெளிப்படுகிறது. அனுபவ மொழி போல், வாழ்க்கை எதார்த்தம் உணர்த்தப்பட்டுள்ளது. இளம் பெண்ணிற்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம், ஒட்டுமொத்த ஆண்கள் மீது, எத்தகைய தாக்குதலை நிகழ்த்துகிறது என சொல்கிறது. இளம் பெண்ணை மணம் முடித்த முதியவர் உள்ளம் எப்படி இருக்கும் என அறிய வைக்கிறது. ‘குணத்தின் குற்றமே குரூரத்தின் வெளிப்பாடு’ என்பதை சம்பவங்களாக விவரிக்கும் பாங்கு உளவியல் வல்லுனரோ என வியக்க வைக்கிறது. விஞ்ஞான உண்மைகள், கதா பாத்திரங்கள் வழியாக சொல்லப்பட்டுள்ளன. சமுதாய அவலங்களை சரியான கோணத்தில் படம் பிடிக்கும் நாவல். – டாக்டர் கார்முகிலோன்




