/ ஜோதிடம் / திருமணத் தடை மற்றும் பிரிவினைக்கான ஜாதக விளக்கம்
திருமணத் தடை மற்றும் பிரிவினைக்கான ஜாதக விளக்கம்
ஜோதிட நுாலக வரலாற்றில், உலகிலேயே முதல்முறையாக கிரகங்களை வண்ணங்களில் அச்சிட்டு வெளியிட்ட சிறப்புக் குரிய சிவராமனுக்கு, வாசகர்கள் சார்பில் பாராட்டுகள்.இந்நுாலில், திருமணம் நடைபெறாத, பிரிவினை ஏற்பட்ட, 20 ஜாதகங்கள், விவாகரத்து பெற்ற, 20 ஜாதகங்கள் ஆகியவை, ஜோதிட முறையில் ஆறு விதிகளின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இந்நுால், ஜோதிட ஆர்வலர்களுக்கு மிக்க பயனளிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!– மாசிலா இராஜகுரு