/ வாழ்க்கை வரலாறு / திருமூலர்
திருமூலர்
ஞானத்தின் ஒளியாக விளங்கும் திருமந்திரத்தை படைத்த திருமூலரின் வாழ்க்கையை விரிவாக தரும் நுால். அவரது, உபசேதங்கள் குறித்த விபரங்களும் தரப்பட்டுள்ளன. பக்திக்கு இடையே பாலமாக விளங்குவதை தெளிவாக தருகிறது. முதல் பகுதி திருமூலரின் வாழ்க்கை வரலாற்றை சுவாரசியம் குன்றாது விவரிக்கிறது. அடுத்து அவரது படைப்பான திருமந்திரத்தின் அமைப்பை அறிமுகம் செய்கிறது. உபசேதங்களை தெளிவாக எடுத்துரைக்கிறது. தொடர்ந்து சிவநெறி, யோக நெறி பற்றிய விளக்கம் தந்து புரிதலை ஏற்படுத்துகிறது. உடலே கோவில், அதற்குள் இறைவன் உறைந்திருக்கிறான் என தத்துவத்தை எளிமையாக புரிய வைக்கிறது. தொண்டு மனப்பான்மையை வலியுறுத்தி வாழ்வின் பல்வேறு நிலைகளை புரிய வைக்கும் அற்புத நுால். – ஒளி




