/ ஆன்மிகம் / திருமூலர் வாழ்வும் வாய்மொழியும்
திருமூலர் வாழ்வும் வாய்மொழியும்
திருமந்திர ஆன்மிக கருத்துகளை முன்வைக்கும் நுால். திருமூலரின் வரலாறு, திருமந்திரம் கூறும் இறைநெறியை விளக்குகிறது. நுட்பமான கருத்துகளுக்கு உரை விளக்கமும் தரப்பட்டு உள்ளது. திருமந்திர பாடலை முதலில் தந்து, வாய்மொழியமுதம் என்ற விளக்கப் பாடலை பதிவு செய்கிறது. தற்கால மொழி நடையிலேயே விளக்கம் வழங்கப்பட்டு உள்ளது. திருமந்திரத்தில் ஒன்பது தந்திரங்களிலிருந்தும் பாடல்களை தேர்ந்தெடுத்து, உள்ளார்ந்த தத்துவங்களை சாரமாக தருகிறது. மன இருளை நீக்கும் ஆன்மிக நெறிகளை எளிய நடையில் எடுத்துக் கூறுகிறது. பாடல்களை புரிந்துகொள்ளும் வகையில் இறுதியில் அருஞ்சொல் பட்டியலுடன் தரப்பட்டுள்ள நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு




