/ ஆன்மிகம் / திருமுருகன் 1008 போற்றிகள் திருமுருகன் 108 போற்றிகள்
திருமுருகன் 1008 போற்றிகள் திருமுருகன் 108 போற்றிகள்
முருகனுக்கு அர்ச்சனை செய்ய ஏற்ற வகையில் போற்றிகள் தரப்பட்டுள்ள நுால். சிவனுக்கு உரிய 108 போற்றிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், தந்தைக்கு உபதேசித்த முருகனும் சிவனும் ஒன்றே என்ற அருணகிரி திருப்புகழ் தத்துவம் வெளிப்படுகிறது. பக்திப் பரவசத்துடன் பாடி மகிழ தனிப் பாடல்களும் தரப்பட்டுள்ளன.எல்லாரும் சேர்ந்து பாடும் முறையில், நாமாவளி போல் பாடல்கள் உள்ளன. அகர வரிசையில் போற்றிகள் உள்ளதால், மனனம் செய்வதும், படிப்பதும் எளிதாக இருக்கும். முருகன் பூஜைக்கு ஏற்ற தமிழ் அர்ச்சனை நுால்.– முனைவர் மா.கி.ரமணன்