/ ஆன்மிகம் / திருப்புகழ் மூலம் முழுவதும்
திருப்புகழ் மூலம் முழுவதும்
சந்த தாளம் மிக்க திருப்புகழ் பாடல்களும், தலக்குறிப்புகளும், பாடல் பயன்களும் அடங்கிய தொகுப்பு நுால். ராகம், தாளம், சந்தக் குறிப்புகளுடன், பொருள் புரியுமாறு தரப்பட்டுள்ளதால் பாடுவது சுலபமாக உள்ளது. முதலில் விநாயகர், பின் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் திருச்செந்துார், திருவாவினன்குடி பழனி, திருவேரகம் சுவாமிமலை வரிசைப்படி பாடல்கள் உள்ளன. கயிலைமலை, மருதமலை, ஸ்ரீசைலம், வேங்கடமலை, வள்ளிமலை, சிவன்மலை திருப்புகழையும், ஆறாம் படைவீடான பழமுதிர்ச்சோலையும் தந்துள்ளது சிறப்பாக உள்ளது. இலங்கை கதிர்காமம், அருக்கொணாமலை, திருகோணமலை திருப்புகழ் பாடல்களும் சிறப்பாக தரப்பட்டுள்ளன. திருப்புகழ் முழுமையான பாடல்களின் தொகுப்பு நுால். – முனைவர் மா.கி.ரமணன்




