/ வாழ்க்கை வரலாறு / திருவள்ளுவர் வாக்கும் வள்ளல் அழகப்பர் வாழ்வும்
திருவள்ளுவர் வாக்கும் வள்ளல் அழகப்பர் வாழ்வும்
வள்ளல் அழகப்பரின் கல்வி கொடை நிகழ்வுகள் பற்றி விவரிக்கும் நுால். வள்ளுவரின் பொய்யாமொழிக்கு சான்று காட்டி நிறுவப்பட்டுள்ளது. திருக்குறளில் சில குறட்களுக்கு புதிய கோணத்தில் பொருள் காணப்பட்டுள்ளது. தவம் என்ற சொல்லுக்கு முயற்சி என்றும், எழுமை என்பதற்கு பல பிறவிகள் என்றும் விளக்கம் கூறப்பட்டுள்ளது. அறிவு அற்றம் காக்கும் கருவி, உண்மை அறிவு, ஒட்பம் மதிநலம், மதிநுட்பம், நுண்பொருள் காணும் அறிவு, மெய்ப்பொருள் காணும் அறிவு பற்றி விளக்கம் தரப்பட்டுள்ளது. அசையும், அசையா பொருள் விளக்கம் சிந்தனைக்குரியது. காரைக்குடியை கல்விக் குடியாக்கியவருக்கு பெருமை சேர்க்கும் நுால்.– புலவர் சு.மதியழகன்