/ தமிழ்மொழி / திருவள்ளுவரும் உலகச் சிந்தனையாளர்களும்

₹ 300

திருக்குறள் கருத்துகளை மற்ற அறிஞர் கருத்துகளுடன் மதிப்பிட்டு அலசும் நுால். தலைநகர் தமிழ்ச்சங்கம் நடத்திய திருக்குறள் மாநாட்டு கருத்தரங்க கட்டுரைகள் தொகுப்பாக தரப்பட்டுள்ளன. உலக அளவில் அறிஞர்களின் சிந்தனை, படைப்புகளுக்கு நிகராக திருக்குறள் பொருத்தப்பாடுகள் வெளிச்சமிடப்பட்டுள்ளன. ஆய்வு நோக்கில் திருக்குறள் சாரம் அழகுற வெளிப்படுத்தப்பட்டுள்ளது. திருவள்ளுவர் கருத்துடன் கன்பூசியஸ், ரூசோ, சேக்ஸ்பியர், பெர்னாட்ஷா போன்ற அறிஞர்களின் சிந்தனைகளும், பார்வையும் ஒருமித்து இருப்பது புலப்படுத்தப்பட்டுள்ளது. வள்ளுவரின் கருத்து மிக எளிமையாக இருப்பதை அடிக்கோடிட்டு காட்டுகிறது. ஒப்புமை நோக்கில் படைக்கப்பட்ட நுால். – -ஊஞ்சல் பிரபு


புதிய வீடியோ