/ ஆன்மிகம் / திருவேங்கடம்

₹ 140

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் பாடிய பாசுரங்களுக்கு விரிவுரை தரும் நுால். மூன்று ஆழ்வார்களும் அவதரித்தது ஐப்பசி மாதம் என்பது ஒற்றுமை. திருவோணம் நட்சத்திரத்தில் பொய்கை ஆழ்வார், அவிட்டம் நட்சத்திரத்தில் பூதத்தாழ்வார், சதயம் நட்சத்திரத்தில் பேயாழ்வார் அவதரித்ததால் அவையும் சிறப்பு பெற்றன. அந்தாதி வகை இலக்கணத்தை முதன் முதலில் தமிழுக்கு வழங்கியது குறிப்பிடப்பட்டுள்ளது. வேதங்களின் நாதமாய் இருப்பவன் எம்பெருமான் என்கிறார் பொய்கை ஆழ்வார். பரமபதம் சென்று அனுபவிக்கக்கூடிய மோட்சத்தை, திருவேங்கடத்தில் வழிபட்டால் கிடைக்கும் என்கிறது பூதத்தாழ்வார் பாசுரம். கி.பி., 5ம் நுாற்றாண்டு தமிழை அறிய வைக்கிறது. வேங்கடத்தான் கருணை பெற உதவும் நுால். – சீத்தலைச்சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை