/ கவிதைகள் / திஸ் தாட் அண்டு எவ்ரிதிங் இன் பிட்வீன் (ஆங்கிலம்)
திஸ் தாட் அண்டு எவ்ரிதிங் இன் பிட்வீன் (ஆங்கிலம்)
வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் விசித்திர கோணங்கள் வழியாக உற்று நோக்கி, உணர்வுகளை அழகுற சித்தரிக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். கவிதைகள் எளிய மொழி நடையில் புனையப் பட்டுள்ளன; ஒவ்வொன்றும் தனித்துவமான கருப்பொருளை பொதிந்துள்ளன. வாழ்வின் மீதான அக்கறையும், நம்பிக்கையும் வெளிப்படுகின்றன. வாழ்க்கையில் அரிதாக உணரும் நுட்பங்களை பிரதிபலிப்பதாக கவிதைகள் உள்ளன. மகிழ்ச்சி, துக்கம், ஆச்சரியம், இழிவு மற்றும் சாகச உணர்வுகள் கவிதைகளில் மலர்கின்றன. அனுபவங்களின் உள்ளிருந்து கொத்தாக விரிந்து வருகின்றன வார்த்தைகள். அவை உள்ளத்தின் வலியை நம்பிக்கையாக மாற்ற முயல்கின்றன. கற்பனை மிளிரும் இனிய கவிதைகளின் தொகுப்பு நுால். – ராம்