/ சிறுவர்கள் பகுதி / திட்டமிடாத வகுப்பறைகள்...
திட்டமிடாத வகுப்பறைகள்...
பள்ளி வகுப்பறைகள் எப்படி அமைந்தால் கற்கும் திறன் அதிகரிக்கும் என்பதை அனுபவ பூர்வமாக அலசும் நுால். வகுப்பறையில் சிறுவர், சிறுமியரை பொம்மையாக பாவிக்கக்கூடாது என உறுதிபட தெரிவிக்கிறது. கற்பிக்கும் போது வகுப்பறையில் பெற்ற அனுபவத்தை சுவைபட எடுத்துரைக்கிறது. சுயமாக ஆர்வத்தை ஏற்படுத்துவதன் வழியாக ஏற்படும் முன்னேற்றத்தை காட்டுகிறது. சிந்திப்பதில் சுதந்திர மனப்பான்மை உருவாக்கும் வழிமுறைகளை எடுத்துரைக்கிறது. வகுப்பறையை புதிய கோணத்தில் அணுகி, கற்போருக்கு உகந்த இடமாக மாற்ற ஆலோசனைகள் தரும் நுால். – மதி