/ வாழ்க்கை வரலாறு / தியாகி ஈ.ஜானகிராம முதலியார்
தியாகி ஈ.ஜானகிராம முதலியார்
சுதந்திர போராட்டம் பற்றி சுவையான தகவல்கள் அளிக்கும் நுால். விடுதலைப் போரில் இளைஞர்களை எழுச்சியூட்டிய நிகழ்வுகளை தருகிறது.வட ஆற்காடு மாவட்டமாக உதயமான வரலாறு, சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றிய மன்னர்கள், தலைவர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஜானகிராம முதலியாரின் இளமை பருவம், கல்வி, குடும்ப வாழ்க்கை, தலைவர்களுடனான சந்திப்பு பற்றி கூறப்பட்டுள்ளது.காந்திஜியின் சகாப்தம், ஜாலியன் வாலாபாக் படுகொலை, கிலாபத் இயக்கம், காந்திஜி ஆற்காடு வருகை, ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம் போன்ற நிகழ்வுகளை பற்றியும் பதிவுகள் உள்ளன. சுதந்திர போராட்ட வரலாற்றில் வீரர்களை அறிமுகப்படுத்தும் நுால்.– முகில்குமரன்