/ யோகா / தியானம்

₹ 110

மன அமைதி, நிம்மதியாக வாழ தியானம் மிகச்சிறந்த மருந்து என விவரிக்கும் நுால். தியானத்தின் வகைகள், எப்படி அமர வேண்டும், எந்த நேரத்தில் செய்ய வேண்டும், உணவு கட்டுப்பாடுகள் குறித்து பகிர்கிறது.வயதானவர்களுக்கு மட்டுமில்லை, இளம் வயதினருக்கும் பயன் அளிக்கும் என்கிறது. குறிப்பாக, மாணவ – மாணவியர் செய்தால் கவனம் செலுத்தும் ஆற்றல் பெருகும் என்கிறது.தியானம் செய்யும்போது வரும் எண்ணங்கள், கவனச்சிதறல், துாக்கம், தொந்தரவுகளை எப்படி கையாள வேண்டும் என பதிய வைக்கிறது. அலை பாயும் மனதை கட்டுப்படுத்த கற்றுக் கொடுக்கும் நுால்.– டி.எஸ்.ராயன்


முக்கிய வீடியோ