/ கட்டுரைகள் / தொல்காப்பிய ஆய்வுக்களமும் தளமும்

₹ 150

தொல்காப்பியத்தை மையப்படுத்தி கருத்தரங்குகளில் வழங்கிய உரைகளை தொகுத்து உருவாக்கிய நுால். முரண் கருத்துகள் பலவற்றை முன்வைத்து மீளாய்வு செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறது. சங்க இலக்கிய உரைகளில் செய்யுள்களை எடுத்துக்காட்டி சுட்டப்பட்ட திணை பாகுபாடு பற்றிய ஆராய்ச்சி முடிவுகள், புதிய மேலாய்வு களங்களை நோக்கியுள்ளன. பெரிய புராணம் முதலாக தற்கால காப்பியங்கள் வரை, தொல்காப்பியம் வகுத்த அகத்துறை மரபுகள் மீறப்பட்டுள்ளதை உதாரணங்களோடு ஆய்ந்து காட்டியுள்ளது. சங்க இலக்கியங்களில் திணை, உரை, கொளு போன்றவற்றை மீளாய்வு செய்ய வேண்டிய தேவையை குறிப்பிடும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை