/ கட்டுரைகள் / தொல்காப்பியக் கடல்
தொல்காப்பியக் கடல்
தமிழிலக்கிய ஆய்வால் புகழ்பெற்ற தமிழறிஞர் வ.சுப.மாணிக்கனார் பல்லாண்டுகளாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நுால். தொல்காப்பிய தொன்மையை ஆராய்ந்து விளக்குகிறது. நுாற்பா நயங்களையும், பொருள்களையும் எடுத்துக்காட்டுகளோடு அறிய செய்கிறது. இல்வாழ்க்கை ஒழுக்கத்திற்கும், உலக அறிவை விரிவாக்குவதற்கும் தொல்காப்பியம் துணை செய்வதை சான்றுகளோடு முன்வைக்கிறது. தொல்காப்பியத்தில் பழமை, புதுமை, மேன்மை போன்ற சிறப்பியல்பையும், தமிழ் எழுத்து முறைகளையும் விளக்குகிறது. இலக்கண உத்திகள், நெறிகள், இலக்கிய கொள்கைகள், உரை, ஒலி நயங்கள் குறித்த கருத்தோட்டங்களை விரிவாக தருகிறது. தொல்காப்பியத்தை ஆய்வு செய்து தொகுத்துள்ள கருவூலம். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு




