/ இலக்கியம் / தொல்காப்பியக் களஞ்சியம்
தொல்காப்பியக் களஞ்சியம்
பழந்தமிழ் நுாலான தொல்காப்பியத்தை ஆய்வு செய்வோருக்கு உதவியாக உருவாக்கப்பட்டுள்ள பொருளடைவு களஞ்சிய நுால். தமிழாய்வுகளில் ஈடுபடுவோருக்கு பயன்படும் வகையில் மறுபதிப்பாக மலர்ந்துள்ளது.பழந்தமிழ் இலக்கிய ஆய்வுகளில் பயன்படுத்தும் வகையில் தொல்காப்பிய பொருளடைவு கடும் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தை படித்து தெளிவு பெற்று சொற்களை அகர வரிசையில் அமைத்து பொருள் கூறப்பட்டுள்ளது. மூல நுாலை புரட்டாமல் பயன்படுத்த வசதியாக உள்ளது.தொல்காப்பிய பதிப்புகள், தொல்காப்பியம் பற்றி எழுதப்பட்ட நுால்கள், தொல்காப்பிய கட்டுரை அடைவு விபரங்களும் முழுமையாக தரப்பட்டுள்ளன. பழந்தமிழ் நுால்களை ஆய்வு செய்வோருக்கு உதவும் நுால்.– ராம்




