/ வாழ்க்கை வரலாறு / தாமஸ் ஆல்வா எடிசன்

₹ 60

கூர்மையான அறிவாற்றலால் மின் விளக்கு உட்பட பல அறிவியல் கண்டு பிடிப்புகளால் சாதனைகள் புரிந்த தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்க்கை வரலாற்று நுால். சிறுவர், சிறுமியருக்கு வழிகாட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. செய்தித்தாள் விற்பனையாளராக வாழ்வை துவக்கி, அறிவியல் கண்ணோட்டத்தால் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி புரிந்த சாதனைகள், 11 தலைப்புகளில் உள்ளன. சினிமா படக்கருவி, மின் விளக்கு கண்டுபிடிப்பு என அபூர்வ நிகழ்வுகள் எளிமையாக தரப்பட்டுள்ளன. அறிவியலில் சாதனை புரிந்த எடிசனின் நம்பிக்கையூட்டும் பொன்மொழிகளும் தொகுத்து தரப்பட்டுள்ளன. கண்டுபிடிப்புகளின் தந்தையாக விளங்கியது குறித்த பெருமையை பறைசாற்றுகிறது. சிறுவர், சிறுமியருக்கு நம்பிக்கையூட்டும் நுால். – ராம்


முக்கிய வீடியோ