/ மாணவருக்காக / தூக்கு வாலி(ளி)
தூக்கு வாலி(ளி)
பள்ளி மாணவர்களால் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். விடுமுறை நாட்களில் அக்கம் பக்கம் கற்றதன் வெளிப்பாடாக அமைந்துள்ளது. குடுவையில் உள்ள தண்ணீரை, காகம் ‘ஸ்ட்ரா’ போட்டு உறிஞ்சு குடிக்கும் கதை ரசிக்க வைக்கிறது. அம்மா பாசத்தை ‘பூனை’ கதை வாயிலாக கூறுகிறது. ஆளுக்கொரு விதையால் பள்ளி வளாகத்தில் தோட்டம் அமைத்து, அந்த காய்கறிகளை சமைத்து சாப்பிடும் கதை, இயற்கை மீது பற்றை ஏற்படுத்துகிறது. அழுதால் தீர்வு இல்லை; முயற்சி மட்டுமே தீர்வு என, ‘காத்தாடி’ கதை புரிய வைக்கிறது. அலைபேசி கருவி கவனத்தை சிதற வைக்கும் என்கிறது. இழந்த பொருட்களை மீட்கலாம்; நேரத்தை திருப்பி கொண்டு வர முடியாது என கூறுகிறது ஒரு கதை. வாழ்வோடு பொருந்தியுள்ள கதை நுால். – டி.எஸ்.ராயன்




