/ வாழ்க்கை வரலாறு / தோழர் சுந்தரமூர்த்தி நாயனாரின் சரிதம்

₹ 190

சுந்தரமூர்த்தி நாயனார் வரலாற்றை நாவல் வடிவில் தரும் நுால். கயிலாய மலை வருணனையுடன் துவங்குகிறது. கயிலாயத்திலிருந்து சுந்தரர் மண்ணுலகத்திற்கு வந்த காரணம் விரிவாக சொல்லப்பட்டுள்ளது. கெடிலம் நதிக்கரையில் தோன்றி, மன்னர் நரசிங்க முனையரையருக்கு வளர்ப்பு மகன் ஆனதில் துவங்குகிறது. சுந்தரர் மேற்கொண்ட திருத்தல யாத்திரை, திருவாரூரில் நீண்ட நாள் தங்கியதையும், பரவை நாச்சியாருடன் காதல் கொண்டதையும் தெரிவிக்கிறது. சிவனே துாது சென்று தம்பிரானை தோழன் ஆக்கியதை விவரிக்கிறது. திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரை திருமணம் செய்த வரலாற்றை தெரிவிக்கிறது. வரலாற்றை நாவல் வடிவில் வழங்கும் நுால். – முகிலை ராசபாண்டியன்


புதிய வீடியோ