/ கட்டுரைகள் / டு லாங்குவேஜ் பார்முலா இன் தமிழ்நாடு (ஆங்கிலம்)
டு லாங்குவேஜ் பார்முலா இன் தமிழ்நாடு (ஆங்கிலம்)
தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இரு மொழி கொள்கை பற்றி ஆய்வு செய்யும் நுால். பல்வேறு மாநில மொழிகளை அலுவலக மொழியாக பயன்படுத்துவதற்கு பெரிதும் தாக்கம் ஏற்படுத்தியதை நிறுவுகிறது.கிராம பஞ்சாயத்து முதல் தலைமைச் செயலகம் வரை அலுவலக மொழியாக தமிழ் விளங்குவதை தெரிவிக்கிறது. அறிவிப்புகள், அறிக்கைகள், அரசு ஆணைகள் தமிழில் வெளியிடப்படுவதையும் சுட்டிக்காட்டுகிறது.சட்டசபை, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மன்றங்களில் தமிழ் மொழியில் விவாதிக்கப்படுவதையும் விளக்குகிறது. நீதிமன்றங்களில் தமிழ் மொழி பயன்படுத்தாததை சுட்டிக் காட்டுகிறது. தமிழ் வளர்ச்சிக்கு நல்ல ஆலோசனைகளை முன் வைக்கும் நுால். –- புலவர் சு.மதியழகன்