/ இசை / டி.ஆர்.ராஜகுமாரி திரையிசைப்பாடல்கள்
டி.ஆர்.ராஜகுமாரி திரையிசைப்பாடல்கள்
தமிழ் சினிமாவில் டி.ஆர்.ராஜகுமாரி பாடல்களின் தொகுப்பு நுால்.திரையுலகில் பாடி, நடித்து புகழ் பெற்றவர் டி.ஆர்.ராஜகுமாரி. கனவுக்கன்னி என புகழ் பெற்றவர். ரசித்துக் கேட்குமளவுக்கு குரல் வளம் பெற்றிருந்தார் என்பதை பாடல் பட்டியல் தெளிவுபடுத்துகிறது. சொந்தமாக பாடியதும், மற்ற பாடகர்களுடன் இணைந்து பாடியவையும் மொத்தமாக தொகுத்து தரப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பாடலுடனும், அது வெளியான படம், இசை, இயற்றியவர், பாடி நடித்தவர் விபரம் தரப்பட்டிருப்பது ஆவணமாக இருக்கிறது. இறுதியில் நடிகையின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கமும், ஆண்டு வாரியாக பாடல் பட்டியலும் இடம்பெற்று இருக்கிறது. திரை இசை ஆர்வலர்களுக்கு அரிய நுால்.– ஊஞ்சல் பிரபு