/ கவிதைகள் / பிளிறல்

₹ 200

சமூக சூழலை கூர்ந்து நோக்கி தமிழ், ஆங்கிலம் என, இரு மொழிகளில் படைக்கப்பட்ட குறுங்கவிதைகளின் தொகுப்பு நுால். மரங்களை வெட்டும் அவலத்தை மிகவும் நுட்பமாக, ‘தவிக்கின்றன கூடு திரும்பிய பறவைகள், சாலையில் பயணித்திருந்தது மரம்’ என்று கூறி, புரிய வைக்கிறது. கவிதைகளுக்கு விளக்கமே தேவையில்லை. எளிய வார்த்தைகள் படிக்கும் போது சட்டென மனதை கவ்வுகின்றன. மழை துளிகளை மென்மையாக வர்ணிக்கும், ‘மூடயிருக் கிறது கண்ணாடி ஜன்னல், சில்லுகளாய் சாரல் துளிகள்’ என அழகுடன் காட்சிப்படுத்துகிறது. மிருகம் வேட்டையாடுவதைப் பார்த்து, ‘செடி அருகே இறகுகள், உண்ட மயக்கத்தில் மறைவாய் பூனை’ என்பது எச்சரிக்கை போல் உள்ளது. இயற்கை நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து சிந்தனையுடன் உருவாக்கியுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். – ராம்


சமீபத்திய செய்தி