/ வரலாறு / உக்ரைன் போர்க்களம்!

₹ 300

உக்ரைன் – ரஷ்யா போரின் காரணங்கள், மோதல், சேதங்கள் பற்றி விரிவாக கூறும் நுால். ரஷ்யாவை விட அளவு, வலிமையில் சிறிய நாடு உக்ரைன். ஆனால், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போரை நடத்தி வியக்க வைத்துள்ளது. கிரிமியாவை ரஷ்யாவுடன் 2௦14ல் இணைத்ததில் இருந்தே பிரச்னை துவங்குகிறது. அமெரிக்கா, உக்ரைனை ஆதரித்ததால் சிக்கல் வளர்ந்துள்ளது. மயக்கும் பேச்சால் ஜெலன்ஸ்கி கவர்ந்ததை காட்டுகிறது. ரஷ்யாவில் மனித உரிமைகள் மோசம் அடைந்ததாக ஐ.நா., அறிக்கை சொல்கிறது. உக்ரைன் பெண்களின் வீரமும், உக்கிரமாகப் போர் செய்யும் திறமையும் அபாரமானதாகக் காட்டப்படுகிறது. ஐந்தாம் முறையாக ரஷ்ய அதிபரான புதின் பற்றிய செய்திகள் உள்ளன. ரண கள உக்ரைன் போர்க்களத்தை கண்முன் நிறுத்தும் நுால். – முனைவர் மா.கி.ரமணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை