/ வாழ்க்கை வரலாறு / உலகக் குடிமகன்
உலகக் குடிமகன்
பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து, கடினமாக முயன்று கற்று உயர்ந்தவரின் சுயசரிதை நுால். ஆய்வுக்கல்வியின் மகத்துவத்தால் உலக நாடுகளில் பணியாற்றியது குறித்து விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.முற்பட்ட வகுப்பில் பிறந்து பொருளாதார நெருக்கடியால் தவித்ததை, காட்சிப்பூர்வமாக பதிவு செய்கிறது. உடன்பிறந்தோர் உழைப்பால் கல்வி பெற்றது குறித்து, நன்றி உணர்வை வெளிப்படுத்துகிறது.கல்வியில் கவனம் செலுத்தி, ஆய்வுகளில் சாதித்ததை குறிப்பிடுகிறது. ஆராய்ச்சியில் பெற்ற சிறப்பு, உலகம் முழுதும் வாய்ப்புகளை ஏற்படுத்தியதை பெருமிதத்துடன் பதிவு செய்துள்ளது. முயற்சியால் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. கல்வியால் உயர்ந்து புகழ் பெற்றவரின் சுயசரிதை நுால்.– ஒளி