/ வரலாறு / உலக வரலாறு (பாகம் – 2)
உலக வரலாறு (பாகம் – 2)
இந்திய விடுதலை போராட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜவஹர்லால் நேரு, 10 ஆண்டுகளில் எழுதிய கடிதங்களின் தொகுப்பு நுால். உலக நாடுகளை அறிமுகம் செய்யும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தில் இந்திய வரலாற்று பக்கங்கள் பல இடம் பெற்றுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த விபரங்கள் விரிவாக இடம் பெற்றுள்ளன. நிகழ்வுகளை அணுகி ஆராய்ந்து, புரிந்துகொள்ளும் வகையில் கருத்துகள் தரப்பட்டுள்ளன.இரண்டாம் தொகுப்பில், 82 முதல் 142 வரை கடிதங்கள் இடம் பெற்றுள்ளன. காலத்தால் அழியாத அறிவின் சின்னங்கள். மக்களையும், மண்ணையும், அதிகார எல்லையையும் புரியும் விதமாக விளக்கப்பட்டுள்ளது. இயல்பாக வாசிக்க ஏற்ற நுால்.– ராம்