/ மருத்துவம் / உலகை உலுக்கும் கொரோனாவும் மறைமுக நன்மைகளும்
உலகை உலுக்கும் கொரோனாவும் மறைமுக நன்மைகளும்
கொரோனா என்ற தீநுண்மி நோயால் உலகம் முழுதும் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நுால். ஆண்டு தோறும், 30 நாட்கள் கட்டாய ஊரடங்கு அமல் படுத்த வேண்டும் என்ற பரிந்துரையுடன் முடித்துள்ளார்.கொரோனா அச்சம் ஏற்பட்டதில் இருந்து, நடந்த எல்லா மாற்றங்களையும் தொகுத்துள்ளார். படங்களையும் இணைத்துள்ளார். மனிதாபிமானம் மற்றும் இயற்கை ஆர்வம் சார்ந்த கண்ணோட்டம் புத்தகம் முழுதும் உள்ளது. ஆய்வு பார்வையுடன் எழுதப்பட்டுள்ளது. தொற்று நோய், உலகில் ஏற்படுத்திய மாற்றங்களை கூறும் நுால்.