/ கவிதைகள் / உலகமே விழித்திடு! உண்மையை நீ அறிந்திடு!!
உலகமே விழித்திடு! உண்மையை நீ அறிந்திடு!!
பக்தி பாடல்களுடன் குறள்கள், கவிச்சோலை, இந்திய தேசம், செந்தமிழ் நாடு, புத்தாண்டு, மனைவி, காதல் திருமணம் என, 55 தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ள நுால். இளைஞர்களுக்கு சீரிய கருத்துக்களும், உழைக்கும் தொழிலாளர்கள் நலனுக்கும், நாட்டின் உயர்வுக்கும் பாடப்பட்டுள்ளன. இறைப்பாடல்கள், மெய்ஞானக்கூற்று மற்றும் தேசியத் தலைவர்கள், உலகத் தலைவர்களை புகழ்ந்தும் பாடப்பட்டுள்ளன.நேர்மை தவறாத வாழ்வை மையப்படுத்தியுள்ளது.தமிழில் உழைப்பாளி, நல்லவனுக்கு நல்லவன், பாட்ஷா, எஜமான் போன்ற சினிமா படங்களின் பெயர் குறிப்பு பற்றியும் எழுதப்பட்டுள்ளது. நன்மை, தீமைகளை அறிந்து வாழ உதவும் நுால்.– வி.விஷ்வா