/ கவிதைகள் / உளிகளுக்கு வலிகள் தெரிவதில்லை

₹ 130

சமூக சிந்தனையை கவிதை வடிவில் வெளிப்படுத்தும் நுால். அவலங்களை சாடி, புதிய உலகத்தை தேடி கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. வேதனையின் விலாசத்தை, ‘பேனா பிடித்த நான் மட்டும் பேதலித்து நிற்கிறேன் மனிதனாக’ என்ற கவிதை தெரிவிக்கிறது. விதி வந்து விழுந்தோரை விட, மதி இழந்து மரணித்தோர் அதிகம் என்பது மிகைப்படுத்தப்படாத நிஜம். ‘அம்மி மிதிக்க ஆசை தான்’ என்ற கவிதை, ஒவ்வொருவரும் பொறுப்புணர்ந்து நடக்க வேண்டியதன் அவசியத்தை கூறுகிறது. காலம் மாறிப்போச்சு! அதற்கு காரணம் யார் என்ற கேள்வி சிந்திக்க வைக்கிறது. ‘தடம் மாறும்போது’ என்ற கவிதை அறிவுரையை கண்ணியமாய் எடுத்துரைக்கிறது. சமூக சிந்தனையை தாங்கிய கவிதைகளின் தொகுப்பு நுால். – டாக்டர் கார்முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை